★ புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது ★ அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை ★
அருள்மிகு பிரசன்னநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயில் நெடுங்குடி
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் -- நெடுங்குடி
செல்லும் வழி

அருள்மிகு பிரசன்னநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயில், நெடுங்குடி - 622 209, புதுக்கோட்டை மாவட்டம்.

புதுக்கோட்டை வழியில் அறந்தாங்கி வந்து காரைக்குடி செல்லும் வழியில் கீழாநிலைக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் இறங்கி மேற்கே சுமார் 1 கி.மீ., தொலைவில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு செல்லலாம்.

கோயில் பெருமைகள்

மூலவருக்கு காசி நாதர் என்ற பெயரும் உண்டு. கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்மன் சன்னதி மற்றும் பரிவார தெய்வங்களுடன் கோபுரங்களும் உள்ளன

பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியர் இங்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்து சர்ப்பநதியில் நீராடி தேரோடும் வீதியில் 5 முறை வலம் வந்து பிரசன்ன நாயகிக்கும், கைலாச நாதருக்கும் அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வணங்கினால் மகப்பேறு உண்டாகும்.

மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் பெற்றோருடன் வந்து இதை செய்தால் திருமணம் உடனே நடக்கும்.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சன்னதி முன்பு மண்டபத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட 12 ராசி சக்கரத்தின் நேராக கீழே தரையில் பதிக்கப்பட்ட பத்மபீடத்தில் அமர்ந்து "ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்

ஒவ்வொரு தமிழ்மாத முதல் தேதியன்றும் மாஸசங்கரம பூஜை நடைபெறும். இந்த பூஜை காலத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருமணமாகாத பெண்கள், சுமங்கலிகள் மற்றும் ஜாதகத்தில் பித்ரு தோஷம், புத்திரதோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், மற்ற ஆண்களும், பெண்களும் அம்மனுக்கும், நாதருக்கும் அர்ச்சனை செய்து கொடிமரத்தின் முன்பு ஐங்கோணக் கோலமிட்டு நெய்தீபம் ஏற்றி மன ஒருமையுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வந்தால் சகல தோஷங்களும் நீங்கி மங்களம் உண்டாகும்

சிறப்புகள்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போல, புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கைலாசநாதர் கோயிலிலும் பவுர்ணமிகளில் கிரிவலம் நடக்கிறது. இந்த ஆலயத்தின் அடிவாரத்தில் கிரிவல வீதியில் ஈசான்ய வடகிழக்கு திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி சுவாமியை தரிசித்தால் வேண்டிய பிரார்த்தனை நிறைவேறும்.

இங்கு பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் கிரிவலமும், பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பஜனை வழிபாடும் நடக்கிறது.

ஆடிபூரத்தன்று அம்பாளுக்கு திருவிழாவும், திருக்கல்யாணமும், கடைசித் திங்களில் ஐயப்பன் சன்னதியில் படிபூஜையும் நடக்கிறது. மாசி மாத மகா சிவராத்திரி விழாவில், தமிழகத்தின் பலபகுதியில் இருந்து 48 நாட்கள் விரதமிருந்து இந்த கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்களும் வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட கோயில்
அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், திருக்கோவர்ணம், புதுக்கோட்டை
அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை
அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில், ஆவுடையார்கோயில்
அருள்மிகு அய்யனார் திருக்கோயில்,, பனங்குளம், புதுக்கோட்டை.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், குமரமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், கண்ணனுார், புதுக்கோட்டை
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், தபசுமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், செவலூர், புதுக்கோட்டை
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், தொண்டைமான் நல்லூர், புதுக்கோட்டை
அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில், நேமம், புதுக்கோட்டை
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், நெடுங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை
அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில், ராங்கியம் உறங்காப்புளி, புதுக்கோட்டை
அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர், புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மூலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அரிமளம், புதுக்கோட்டை
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பேரையூர், புதுக்கோட்டை
அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் கோயில், திருமணஞ்சேரி, புதுக்கோட்டை
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல், புதுக்கோட்டை
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவப்பூர், புதுக்கோட்டை
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் - மலையக்கோயில புதுக்கோட்டை